பேச்சுத் தமிழை எழுத்துத் தமிழாக மாற்றுவது எப்படி?

Spoken Tamil to formal Tamil, and Tamil words for English words

புள்ளியில் «முறையான தமிழ்» தேர்வு இயக்கத்தில் இருந்தால், பேச்சு வழக்குச் சொற்கள் நடைப் பரிந்துரைகளாகக் குறிக்கப்படும்: «இருக்கேன்» → «இருக்கிறேன்». ஒவ்வொரு மாற்றமும் காரணத்துடன் வரும்; வேண்டியதை மட்டும் ஏற்கலாம், அல்லது «எல்லாம் திருத்து» மூலம் அனைத்தையும் ஏற்கலாம்.

With Pulli’s formal Tamil option on, spoken forms are marked as style suggestions: “இருக்கேன்” → “இருக்கிறேன்”. Each change comes with its reason; accept the ones you want, or all at once.

புள்ளியைத் திற Open Pulli, free

எப்படிப் பயன்படுத்துவது How to use it

  1. உரையை ஒட்டுங்கள்

    பேச்சு நடையில் எழுதிய உரையைப் புள்ளியில் ஒட்டுங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள்.

    Paste or type your spoken-style text.

  2. «முறையான தமிழ்» இயக்கத்தில் உள்ளதா எனப் பாருங்கள்

    எழுதுபெட்டியின் கீழ் உள்ள சரிபார்ப்புத் தேர்வுகளில் «முறையான தமிழ்» இயக்கத்தில் இருக்க வேண்டும் (இயல்பாகவே இயக்கத்தில் இருக்கும்).

    Make sure the formal Tamil option under the editor is on (it is by default).

  3. பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

    ஒவ்வொரு பரிந்துரையையும் அதன் காரணத்துடன் படித்து ஏற்கலாம், அல்லது விட்டுவிடலாம்.

    Read each suggestion with its reason and accept or skip it.

எடுத்துக்காட்டுகள் Examples

கீழே உள்ளவை புள்ளி உண்மையில் தரும் பரிந்துரைகள்.

These are real suggestions from Pulli.

பேச்சு Spoken

நான் வீட்டுல இருக்கேன். நீங்க எப்போ வர்றீங்க?

எழுத்து Formal

நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் எப்போது வருகிறீர்கள்?

  • வீட்டுல → வீட்டில்: பேச்சில் வேற்றுமை உருபு சுருங்கி 'வீட்டுல' என்று வரும். எழுத்தில் முழு உருபுடன் 'வீட்டில்' என்று எழுதுவோம்.
  • இருக்கேன் → இருக்கிறேன்: 'இருக்கேன்' பேச்சு வழக்கு வினை வடிவம். எழுத்து வழக்கில் 'இருக்கிறேன்' என்று முழு வடிவில் எழுதுவோம்.
  • நீங்க → நீங்கள்: 'நீங்க' பேச்சு வழக்குச் சொல். எழுத்து வழக்கில் 'நீங்கள்' என்று எழுதுவோம்.
  • எப்போ → எப்போது: 'எப்போ' பேச்சு வழக்குச் சொல். எழுத்து வழக்கில் 'எப்போது' என்று எழுதுவோம்.
  • வர்றீங்க → வருகிறீர்கள்: 'வர்றீங்க' பேச்சு வழக்கு வினை வடிவம். எழுத்து வழக்கில் 'வருகிறீர்கள்' என்று முழு வடிவில் எழுதுவோம்.

பேச்சு Spoken

அவன் எங்க போறான்னு தெரியல.

எழுத்து Formal

அவன் எங்க போறான்னு தெரியவில்லை.

  • தெரியல → தெரியவில்லை: பேச்சில் 'தெரியல' என்று சுருக்கிச் சொல்வோம். எழுத்தில் எதிர்மறை 'இல்லை' முழுமையாக வரும்: 'தெரியவில்லை'.

ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் Tamil words for English loanwords

இதே தேர்வில், ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களும் பரிந்துரைக்கப்படும்: «கம்ப்யூட்டர்» → «கணினி».

The same option also suggests Tamil words for English loanwords: “கம்ப்யூட்டர்” → “கணினி”.

இது எப்படி இயங்குகிறது How it works

இந்த மாற்றங்கள் தமிழ் மொழி அறிவின் அடிப்படையில் எழுதப்பட்ட விதிகளிலிருந்து வருகின்றன; AI மாதிரியால் அல்ல. அதனால் ஒவ்வொரு மாற்றத்துக்கும் காரணம் சொல்ல முடிகிறது, உங்கள் உரையும் உங்கள் சாதனத்தை விட்டு வெளியேறுவதில்லை. ஏற்கெனவே எழுத்துத் தமிழில் உள்ள உரையைப் புள்ளி மாற்றாது. முழு வாக்கியத்தையும் மாற்றி எழுதும் வசதி இப்போது இல்லை.

These changes come from hand-written rules, not an AI model, so every change has a reason and your text never leaves your device. Text that is already formal is left alone. Pulli does not rewrite whole sentences.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Frequently asked questions

பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் என்ன வேறுபாடு? What is the difference between spoken and written Tamil?

பேச்சில் சொற்கள் சுருங்கும் (இருக்கு, வர்றீங்க, வீட்டுல); எழுத்தில் முழு வடிவம் வரும் (இருக்கிறது, வருகிறீர்கள், வீட்டில்). கடிதம், விண்ணப்பம், கட்டுரை, செய்தி போன்றவற்றுக்கு எழுத்துத் தமிழ் பொருத்தமானது.

Speech shortens words (இருக்கு, வர்றீங்க, வீட்டுல); formal writing uses the full forms (இருக்கிறது, வருகிறீர்கள், வீட்டில்). Letters, applications, essays and news use formal Tamil.

இது AI மூலம் மாற்றி எழுதுகிறதா? Does it use AI to rewrite?

புள்ளியின் சொந்த மாற்றங்கள் மொழி விதிகளிலிருந்து வருகின்றன. விருப்பமான «மாற்றி எழுது» பரிந்துரை மட்டும் உங்கள் சாதனத்திலேயே இயங்கும் மொழிபெயர்ப்பு மாதிரியைப் பயன்படுத்துகிறது. எதையும் தானாக மாற்றுவதில்லை; ஒவ்வொன்றையும் நீங்களே பார்த்து ஏற்கலாம்

Pulli's own changes come from language rules. Only the optional “மாற்றி எழுது” suggestion uses a translation model that runs on your device. Nothing is changed automatically; you review and accept each change.