இலவசத் தமிழ் எழுத்துப்பிழை, இலக்கணத் திருத்தி · Free Tamil spell & grammar checker

பிழைகளுக்கு முற்றுப்புள்ளி.

எழுத்துப்பிழை, சந்திப் பிழை, இலக்கணப் பிழை — எழுதும்போதே கண்டறிந்து, ஒவ்வொரு திருத்தத்துக்கும் காரணத்தைத் தமிழில் விளக்கும். ஆங்கில எழுத்தில் தமிழ் தட்டச்சு, பாமினி → யூனிகோடு மாற்றம் — எல்லாம் ஒரே இடத்தில், இலவசமாக.

A free Tamil spell checker and grammar checker that explains every correction, with English-to-Tamil typing and Bamini-to-Unicode conversion. No sign-up; your text never leaves your device.

பதிவு தேவையில்லை · நிறுவத் தேவையில்லை · No sign-up, nothing to install

அந்த பையன் → அந்தப் பையன்மலை பெய்தது → மழை பெய்ததுகன்டேன் → கண்டேன்இருக்கு → இருக்கிறதுஒளவையார் → ஔவையார்கம்ப்யூட்டர் → கணினி
முற்றிலும் இலவசம்கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை. Free, no ads.
உங்கள் உரை உங்களிடமேசரிபார்ப்பு முழுவதும் உங்கள் சாதனத்திலேயே. Checked on your device.
ஒவ்வொரு திருத்தத்துக்கும் காரணம்விதியை எளிய தமிழில் விளக்கும். Every fix explained.

தமிழில் எழுத வேண்டிய அனைத்தும், ஒரே இடத்தில்

Tamil spell checker, grammar checker, Tamil typing and font converter — together, free.

சந்திப் பிழை, இலக்கணத் திருத்தி

வல்லினம் மிகும், மிகாது இடங்கள்; எழுவாய்–வினை இயைபு. அந்த பையன் → அந்தப் பையன்.

Tamil grammar and sandhi checker: vallinam doubling and subject–verb agreement.

மேலும் அறிய →: சந்திப் பிழை, இலக்கணத் திருத்தி

தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

ல/ள/ழ, ர/ற, ன/ண/ந குழப்பங்களைக் கண்டறியும். கன்டேன் → கண்டேன்; மலை, மழை வேறுபாட்டையும் சுட்டும்.

Tamil spell checker for confusable letters (ல/ள/ழ, ர/ற, ன/ண/ந).

மேலும் அறிய →: தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

ஆங்கிலத்தில் தமிழ் தட்டச்சு

vanakkam என்று தட்டச்சு செய்தால் வணக்கம். எழுதும்போதே சொல் பரிந்துரைகள்; நீங்கள் தேர்வு செய்வதைக் கற்றுக்கொள்ளும்.

English to Tamil typing (Tanglish) with ranked word suggestions.

மேலும் அறிய →: ஆங்கிலத்தில் தமிழ் தட்டச்சு

முறையான தமிழ், தமிழ்ச் சொற்கள்

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக்கும்: இருக்கு → இருக்கிறது. ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்: கம்ப்யூட்டர் → கணினி.

Spoken Tamil to formal Tamil, and Tamil words for English words.

மேலும் அறிய →: முறையான தமிழ், தமிழ்ச் சொற்கள்

மூன்றே படிகள்

  1. எழுதுங்கள்தமிழில் நேரடியாக, ஆங்கில எழுத்தில், அல்லது தமிழ்99-இல் — எப்படி வேண்டுமானாலும். Write or paste.
  2. பாருங்கள்பிழைகள் சிவப்பிலும், பரிந்துரைகள் மஞ்சளிலும் அடிக்கோடிடப்படும்; பக்கத்தில் காரணம். See each mark and why.
  3. திருத்துங்கள்ஒரே சொடுக்கில் திருத்தலாம், அல்லது ‘இது சரிதான்’ என்று விடலாம். Fix in one click, or keep it.

ஆங்கில விசைப்பலகையிலேயே தமிழ்

ஒலிக்கும்படியே தட்டச்சு செய்யுங்கள். Space அழுத்தினால் முதல் பரிந்துரை; 1–5 எண்ணால் வேறொன்றைத் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் புள்ளி நினைவில் வைக்கும் — உங்கள் சாதனத்தில் மட்டும்.

Type it as it sounds. Space takes the first suggestion; keys 1–5 pick another.

எழுத்து வழிகாட்டி Letter guide →

எங்கே பயன்படுத்தலாம்?

இப்போதேஇணையச் செயலிஉலாவியில் திறந்தால் போதும்; ஒருமுறை திறந்த பிறகு இணையம் இல்லாமலும் இயங்கும். Web app, works offline.
விரைவில்Chrome, Edge நீட்டிப்புஎந்த இணையதளத்தின் உரைப் பெட்டியிலும் தட்டச்சும் சரிபார்ப்பும். Coming soon.
விரைவில்Mac, Windowsகோப்புகளைத் திறந்து சேமிக்கும் தனிச் செயலி. Desktop apps, coming soon.

யாருக்கெல்லாம் புள்ளி?

மாணவர்கள், ஆசிரியர்கள்பிழையைத் திருத்துவதோடு விதியையும் கற்றுத்தரும்; கட்டுரை, ஒப்படைப்பு எழுத உதவும்.Students and teachers: learn the rule, not just the fix.
செய்தியாளர்கள், எழுத்தாளர்கள்வெளியிடும் முன் விரைவான சரிபார்ப்பு; சந்திப் பிழைகள், குழப்பும் சொற்கள்.Journalists and writers: fast checks before publishing.
அலுவலகம், அரசுப் பணிமுறையான தமிழில் கடிதங்கள், அறிவிப்புகள்; தமிழ்99 தட்டச்சு.Office and government staff: formal Tamil, Tamil99 typing.
சமூக ஊடகம், அன்றாட எழுத்துஆங்கில எழுத்திலேயே தமிழ் தட்டச்சு; ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்.Creators and everyday writers: type Tamil in English letters.

ஏன் புள்ளி?

பல தமிழ்க் கருவிகள் ஒரே வேலையைச் செய்கின்றன: ஒன்று தட்டச்சு, ஒன்று எழுத்துரு மாற்றம், ஒன்று சொல்திருத்தம். புள்ளி அனைத்தையும் ஒன்றாகத் தருகிறது — உங்கள் உரையை எங்கும் அனுப்பாமல்.

Most Tamil tools do one job. Pulli does them together, without sending your text anywhere.

  • முற்றிலும் இலவசம், பதிவு தேவையில்லைFree, no account needed.
  • உங்கள் சாதனத்திலேயே சரிபார்ப்புYour text never leaves your device; works offline after the first visit.
  • ஒவ்வொரு திருத்தத்துக்கும் தமிழில் விளக்கம்Every correction comes with its rule, in Tamil.
  • சரிபார்ப்பு, தட்டச்சு, மாற்றம் — ஒரே இடம்Checking, typing and font conversion in one place.
  • தவறான திருத்தங்களைத் தவிர்க்கக் கடுமையான சோதனைEvery rule is tested on a large set of correct Tamil sentences before it ships.

தமிழ் விதிகளை எளிதாகக் கற்போம்

புள்ளி பயன்படுத்தும் ஒவ்வொரு விதிக்கும் எடுத்துக்காட்டுகளுடன் தனிப் பக்கம். A page for every rule, with examples. விதிகள் நூலகம் →

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இலவசத் தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இருக்கிறதா? Is there a free Tamil spell checker?

ஆம். புள்ளி முற்றிலும் இலவசம்: எழுத்துப்பிழை, சந்திப் பிழை, இலக்கணப் பிழைகளைத் திருத்தி, ஒவ்வொன்றுக்கும் காரணத்தைச் சொல்லும். பதிவு தேவையில்லை. என்னென்ன சரிபார்க்கும். Yes — Pulli is a free Tamil spell and grammar checker.

தமிழ் இலக்கணப் பிழையை இணையத்தில் எப்படிச் சரிபார்ப்பது? How do I check Tamil grammar online?

புள்ளியைத் திறந்து உரையை எழுதுங்கள் அல்லது ஒட்டுங்கள். பிழைகள் சிவப்பில் அடிக்கோடிடப்படும்; பக்கத்தில் திருத்தமும் காரணமும் தோன்றும். Paste your text; errors are underlined with the fix and the reason.

ஆங்கில எழுத்தில் தமிழ் எப்படித் தட்டச்சு செய்வது? How do I type Tamil in English letters?

ஒலிக்கும்படியே எழுதுங்கள்: vanakkam → வணக்கம். th → த, zh → ழ, L → ள, R → ற, N → ண. Space அழுத்தினால் தமிழாக மாறும்; 1–5 எண்களால் வேறு பரிந்துரையைத் தேர்வு செய்யலாம். முழு எழுத்து வழிகாட்டி. Type it as it sounds; Space converts, 1–5 pick another suggestion.

ழ எழுத்தை ஆங்கிலத்தில் எப்படி டைப் செய்வது? How do I type ழ (zha) in English?

zh என்று தட்டச்சு செய்யுங்கள்: thamizh → தமிழ், mazhai → மழை. Type zh for ழ.

பாமினி (Bamini) உரையை யூனிகோடாக மாற்றுவது எப்படி? How do I convert Bamini to Unicode?

உரையைப் புள்ளியில் ஒட்டுங்கள். Bamini, TSCII, TAB, TAM எழுத்துருவைத் தானாகக் கண்டறிந்து யூனிகோடாக மாற்ற முன்வரும். யூனிகோடிலிருந்து பழைய எழுத்துருவுக்கும் நகலெடுக்கலாம். எப்படி என்று பாருங்கள். Paste the text; Pulli detects Bamini, TSCII, TAB or TAM and offers to convert it, and can copy back to the old font.

வல்லினம் மிகும் இடங்கள் எவை? When does the hard consonant double in Tamil (vallinam rules)?

அந்த, இந்த, எந்த; ஐ, கு வேற்றுமை உருபுகள்; ஆக என முடியும் சொற்கள் ஆகியவற்றுக்குப் பின் க, ச, த, ப வந்தால் வல்லினம் மிகும்: அந்தப் பையன், புத்தகத்தைப் படித்தான், மெதுவாகப் பேசினாள். எல்லா இடங்களும். After அந்த/இந்த/எந்த, the case markers ஐ and கு, and words ending in ஆக, when the next word starts with க, ச, த or ப.

அந்த பையன், அந்தப் பையன் — எது சரி? “Antha paiyan” or “anthap paiyan”: which is correct?

அந்தப் பையன். அந்த என்ற சொல்லுக்குப் பின் ப வருவதால் ப் மிகும். விதியை விரிவாகப் படியுங்கள். அந்தப் பையன்: after அந்த, a following ப doubles.

வாழ்த்துகள், வாழ்த்துக்கள் — எது சரி? Vazhthukal or vazhthukkal: which is correct?

இரண்டும் வழக்கில் உள்ளன. இலக்கண அறிஞர்கள் பலர் வாழ்த்துகள் என்பதையே பரிந்துரைக்கின்றனர். புள்ளி இதை மென்மையான பரிந்துரையாக மட்டும் காட்டும். ஏன் என்று படியுங்கள். Both are in use; many grammarians recommend வாழ்த்துகள், and Pulli shows it only as a gentle suggestion.

நான் எழுதுவது எங்காவது அனுப்பப்படுமா? Is what I write sent anywhere?

இல்லை. சரிபார்ப்பு, தட்டச்சு, மாற்றம் அனைத்தும் உங்கள் சாதனத்திலேயே நடக்கின்றன. ஒருமுறை திறந்த பிறகு இணையம் இல்லாமலும் இயங்கும். No — everything runs on your device, even offline.

மலை, மழை; அரை, அறை — வேறுபாடு என்ன? What is the difference between ல, ள and ழ words like malai and mazhai?

மலை என்பது குன்று, மழை என்பது வானிலிருந்து பெய்யும் நீர்; அரை என்பது பாதி, அறை என்பது வீட்டின் அறை. புள்ளி சூழலைப் பார்த்து இவற்றில் வரும் குழப்பத்தைச் சுட்டும். மலை, மழை · அரை, அறை. மலை is a hill, மழை is rain; அரை is half, அறை is a room. Pulli uses the context to point out mix-ups.

இன்றே தமிழில் பிழையின்றி எழுதுங்கள்

Start writing better Tamil today — free, private, explained.

புள்ளியைத் திறக்கவும்