தனியுரிமைக் கொள்கை
Privacy policy
சுருக்கமாக: நீங்கள் எழுதுவது உங்கள் சாதனத்திலேயே சரிபார்க்கப்படுகிறது. அது எங்களுக்கோ வேறு எவருக்கோ அனுப்பப்படுவதில்லை.
In short: what you write is checked on your own device. It is not sent to us or to anyone else.
உங்கள் உரை Your text
சரிபார்ப்பு, தட்டச்சு, அகராதி, எழுத்துரு மாற்றம் ஆகிய அனைத்தும் உங்கள் உலாவியிலோ கணினியிலோ நடக்கின்றன. உங்கள் உரையை நாங்கள் சேமிப்பதோ பார்ப்பதோ இல்லை.
Checking, typing, the dictionary and font conversion all run in your browser or on your computer. We do not store or see your text.
மொழிபெயர்ப்பும் இயந்திரப் பரிந்துரையும் Translation and machine suggestions
எழுதும் செயலியில் மொழிபெயர்ப்பு, ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல், “மாற்றி எழுது” ஆகியவையும் உங்கள் சாதனத்திலேயே நடக்கின்றன; உங்கள் உரை எங்கும் அனுப்பப்படுவதில்லை. கணினியில் Chrome, Edge உலாவிகளில் உலாவியின் சொந்த மொழிபெயர்ப்பு வசதி பயன்படும் (அதன் மாதிரியை உலாவியே தன் நிறுவனத்திடமிருந்து பதிவிறக்குகிறது). கைபேசிகளிலும் மற்ற உலாவிகளிலும் Mozilla உருவாக்கிய திறந்த மொழிபெயர்ப்பு மாதிரி (ஒரு திசைக்குச் சுமார் 25 MB), நீங்கள் பொத்தானை அழுத்தும்போது மட்டும், புள்ளியின் தளத்திலிருந்து ஒருமுறை உங்கள் சாதனத்துக்குப் பதிவிறக்கப்பட்டு அங்கேயே இயங்குகிறது. புள்ளி எதையும் சேமிப்பதில்லை.
In the writing app, translation, Tamil words for English words and “rewrite” also run on your device; your text is not sent anywhere. In Chrome and Edge on a computer they use the browser’s own translator (the browser downloads its model from its vendor). On phones and in other browsers, Mozilla’s open translation model (about 25 MB per direction) is downloaded once from Pulli’s own site, only when you press the button, and runs on your device. Pulli stores nothing.
உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படுபவை What is kept on your device
நீங்கள் தேர்ந்தெடுத்த சரிபார்ப்பு அமைப்புகளும், தட்டச்சுப் பரிந்துரைகளில் நீங்கள் தேர்வு செய்த சொற்களும் உங்கள் உலாவியில் மட்டுமே சேமிக்கப்படுகின்றன. உலாவித் தரவை அழித்தால் அவை நீங்கும்.
Your check settings and the words you pick from typing suggestions are stored only in your browser. Clearing your browser data removes them.
வருகைக் கணக்கு (Google Analytics) Visit statistics (Google Analytics)
புள்ளி இணையதளமும் எழுதும் செயலியும் Google Analytics மூலம் வருகைகளைக் கணக்கிடுகின்றன: எத்தனை பேர் வருகிறார்கள், எந்தப் பக்கங்களைப் பார்க்கிறார்கள். இதற்காக Google உங்கள் உலாவியில் குக்கீகளை வைக்கும்; உலாவி, சாதன வகை, தோராயமான இடம் போன்ற தகவல்கள் Google-க்குச் செல்லும். நீங்கள் எழுதும் உரை ஒருபோதும் அனுப்பப்படுவதில்லை; அது உங்கள் சாதனத்திலேயே இருக்கும். புள்ளி இந்தத் தகவலைத் தன் சர்வரில் சேமிப்பதில்லை. இதை விரும்பாவிட்டால் Google-இன் விலகல் நீட்சியைப் பயன்படுத்தலாம் அல்லது உலாவியில் குக்கீகளைத் தடுக்கலாம். Google Analytics விலகல்
The Pulli website and writing app use Google Analytics to count visits: how many people come and which pages they view. Google sets cookies in your browser for this, and details such as your browser, device type and approximate location go to Google. The text you write is never sent; it stays on your device. Pulli keeps none of this on its own server. To opt out, use Google's opt-out browser add-on or block cookies in your browser. Google Analytics opt-out
கணக்கு இல்லை No account, nothing stored with us
புள்ளியைப் பயன்படுத்தக் கணக்கு தேவையில்லை. உங்கள் உரையோ அமைப்புகளோ எந்தத் தகவலோ எங்கள் சர்வரில் சேமிக்கப்படுவதில்லை; எல்லாம் உங்கள் சாதனத்திலேயே இருக்கும்.
Pulli needs no account. We store nothing on our servers: not your text, not your settings, nothing about you. Everything stays on your device.
விளம்பரம் இல்லை, விற்பனை இல்லை No ads, no selling data
புள்ளியில் விளம்பரம் இல்லை. உங்கள் தகவலை நாங்கள் விற்பதில்லை.
Pulli shows no ads, and we never sell your information.
கேள்விகள் Questions
தனியுரிமை பற்றிய கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். For privacy questions, contact us.
புதுப்பிக்கப்பட்டது · Last updated: 13 அக்டோபர் 2026 · 13 October 2026