எங்களைப் பற்றி

About us

புள்ளி, Happy Coders உருவாக்கிய இலவசத் தமிழ் எழுத்து உதவியாளர். தமிழில் எழுதும் எவரும் பிழையின்றி, நம்பிக்கையுடன் எழுத உதவுவதே எங்கள் நோக்கம்.

Pulli is a free Tamil writing assistant made by Happy Coders. Our aim is to help anyone who writes Tamil write it correctly and with confidence.

புள்ளி என்ன செய்யும் What Pulli does

  • சந்தி, எழுத்துப்பிழை, இலக்கணம், குழப்பும் சொற்கள் ஆகியவற்றைச் சரிபார்த்து, ஒவ்வொரு திருத்தத்துக்கும் காரணத்தைத் தமிழில் விளக்கும்.
  • ஆங்கில எழுத்தில் (Tanglish) அல்லது தமிழ்99 விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு செய்ய உதவும்.
  • பேச்சுத் தமிழை எழுத்துத் தமிழாக மாற்றப் பரிந்துரைக்கும்.
  • Bamini, TSCII, TAB, TAM போன்ற பழைய எழுத்துரு உரையை யூனிகோடாக மாற்றும்.

It checks sandhi, spelling, grammar and confusable words and explains every correction in Tamil; helps you type Tamil in Tanglish or with the Tamil99 keyboard; suggests formal Tamil for spoken Tamil; and converts old-font text (Bamini, TSCII, TAB, TAM) to Unicode.

பெயர் The name

புள்ளி என்பது தமிழ் எழுத்தில் மெய்யெழுத்தைக் குறிக்கும் சிறு குறி: க் என்பதில் மேலே உள்ள புள்ளி. பெரும்பாலான சந்தித் திருத்தங்கள் ஒரு புள்ளியைச் சேர்ப்பதோ நீக்குவதோதான். எங்கள் முழக்கம்: பிழைகளுக்கு முற்றுப்புள்ளி.

The pulli is the dot that marks a pure consonant in Tamil script (the dot on top of க்), and most sandhi fixes add or remove one. Our tagline: a full stop to errors.

Happy Coders Who we are

புள்ளி, Happy Coders குழுவால் சுயமாக உருவாக்கப்படுகிறது. பரிந்துரைகள், பிழைகள், கருத்துகள் எதுவாக இருந்தாலும் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Pulli is built independently by Happy Coders. For suggestions, bug reports or feedback, contact us.