பாமினி (Bamini) உரையை யூனிகோடாக மாற்றுவது எப்படி?
Bamini to Unicode, Unicode to Bamini, TSCII, TAB and TAM: a free Tamil font converter
பழைய எழுத்துரு உரையைப் புள்ளியில் ஒட்டுங்கள். அது Bamini, TSCII, TAB, TAM உரையைத் தானாகக் கண்டறிந்து யூனிகோடாக மாற்றத் தரும்: «jkpo; vOj xNu ,lk;» என்ற Bamini உரை «தமிழ் எழுத ஒரே இடம்» ஆகும். மாற்றம் உங்கள் சாதனத்திலேயே நடக்கிறது; இலவசம்.
Paste the old-font text into Pulli. It detects Bamini, TSCII, TAB and TAM text and offers to convert it to Unicode: the Bamini text “jkpo; vOj xNu ,lk;” becomes “தமிழ் எழுத ஒரே இடம்”. Conversion runs on your device, free.
புள்ளியைத் திற Open Pulli, free
மாற்றுவது எப்படி How to convert
பழைய உரையை நகலெடுங்கள்
Word கோப்பு, PDF அல்லது பழைய இணையப் பக்கத்திலிருந்து, ஆங்கில எழுத்துகளாகத் தெரியும் உரையை நகலெடுங்கள்.
Copy the text that shows up as English-looking characters.
புள்ளியில் ஒட்டுங்கள்
புள்ளியின் எழுதுபெட்டியில் ஒட்டுங்கள். «பழைய எழுத்துரு» தேர்வு இயக்கத்தில் இருந்தால், புள்ளி எழுத்துருவைக் கண்டறிந்து மாற்றத் தரும்.
Paste it into Pulli. With the old-font option on, Pulli detects the encoding and offers conversion.
சரிபார்த்து நகலெடுங்கள்
மாற்றிய உரையைப் படித்துப் பாருங்கள், பின் «நகலெடு» மூலம் யூனிகோடு உரையை எடுங்கள்.
Read the result, then copy the Unicode text.
எடுத்துக்காட்டு Example
| எழுத்துரு Encoding | பழைய உரை Legacy text | யூனிகோடு Unicode |
|---|---|---|
| Bamini | jkpo; vOj xNu ,lk; | தமிழ் எழுத ஒரே இடம் |
| TSCII | ¾Á¢ú ±Ø¾ ´§Ã ¼õ | தமிழ் எழுத ஒரே இடம் |
| TAM | îI› â¿î å«ó Þì‹ | தமிழ் எழுத ஒரே இடம் |
TSCII உரை பொருத்தமான எழுத்துரு இல்லாத கணினியில் மேலே உள்ளது போலக் குழப்பமாகத் தெரியும். யூனிகோடாக மாற்றினால் எந்தச் சாதனத்திலும் சரியாகத் தெரியும்; தேடலிலும் கிடைக்கும்.
Without the matching font, TSCII text looks garbled like the above. Converted to Unicode it displays correctly everywhere and can be searched.
யூனிகோடு ஏன் முக்கியம் Why Unicode matters
Bamini போன்ற பழைய எழுத்துருக்கள் ஆங்கில எழுத்துகளின் இடத்தில் தமிழ் வடிவங்களை வரைகின்றன. அந்த எழுத்துரு இல்லாத கணினியிலோ கைபேசியிலோ உரை புரியாத எழுத்துகளாகத் தெரியும்; Google தேடலும் அதைத் தமிழாகப் புரிந்துகொள்ளாது. யூனிகோடு எல்லாச் சாதனங்களிலும் ஒரே மாதிரி இயங்கும்.
Old fonts such as Bamini draw Tamil shapes over English letters. Without that font the text is unreadable, and search engines cannot read it as Tamil. Unicode works the same on every device.
தேவைப்பட்டால் மறு திசையிலும் மாற்றலாம்: «நகலெடு» பொத்தானுக்கு அருகில் உள்ள தேர்வில் Bamini, TSCII, TAB அல்லது TAM எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து, பழைய எழுத்துருவை மட்டுமே ஏற்கும் மென்பொருளுக்கு உரையை எடுத்துச் செல்லலாம்.
You can also convert the other way: choose Bamini, TSCII, TAB or TAM next to the Copy button to take text into software that only accepts old fonts.
Bamini எழுத்துருவுக்குச் சில வகைகள் உண்டு; சில எழுத்துகள் வேறுபடலாம். நீண்ட ஆவணங்களை மாற்றிய பின் ஒருமுறை படித்துப் பாருங்கள். Bamini has a few variants and some letters can differ, so read long documents through after converting.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Frequently asked questions
Bamini உரையை யூனிகோடாக மாற்றுவது எப்படி? How to convert Bamini to Unicode?
Bamini உரையை நகலெடுத்துப் புள்ளியில் ஒட்டுங்கள். புள்ளி அதைக் கண்டறிந்து யூனிகோடாக மாற்றத் தரும். பின் «நகலெடு» மூலம் யூனிகோடு உரையை எடுங்கள்.
Copy the Bamini text and paste it into Pulli. It detects the encoding and offers conversion; then copy the Unicode text.
எந்த எழுத்துருக்கள் ஆதரிக்கப்படுகின்றன? Which legacy encodings are supported?
இப்போது Bamini, TSCII, TAB, TAM. இரு திசைகளிலும் மாற்றலாம்.
Bamini, TSCII, TAB and TAM today, in both directions.
என் ஆவணம் எங்காவது பதிவேற்றப்படுமா? Is my document uploaded?
இல்லை. மாற்றம் முழுவதும் உங்கள் உலாவியிலேயே நடக்கிறது.
No. Conversion happens entirely in your browser.